இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்! சாடும் சாள்ஸ் நிர்மலநாதன்
இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான் சாள்ஸ் நிர்மலநாதன் சாடியுள்ளார். இன்றையதினம் நாடாளுஇமன்ற அமர்வில் கலந்துகொண்ட்டு பேசுகையில் அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், 2009 ஆம் ஆண்டில் பின்னர் உள்நாட்டு போரின் தமிழ்ர் பகுதிகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வீதியில் நிற்கின்ற நிலையில் அவர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்படுகின்றன.
தமது பிரதேசங்களை இழந்து தமிழ் மக்கள் தவித்துவரும் நிலையில், சிங்கள் மக்கள் வாழாத இடங்களில் புத்த பகவானை பிரதிஸ்டை செய்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய சாள்ஸ் நிர்மலநாதன், தமிழர் பிரதேசங்களில் சிங்கள் மக்களை குடியேற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிகைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் சாடினார்.