சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவுகள்!
சுவாச பிரச்சினை என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
அதிலும் சைனஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு அடிக்கடி மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு வரும் போது சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஆரோக்கியமான உணவுகள்
இந்த உணவுகள் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து சைனஸ் பிரச்சினையை தீர்க்க உதவுகிறது.
அந்த வகையில் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்
நல்ல சுத்தமான வடிகட்டிய தண்ணீரை குடிப்பது சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. தண்ணீர் குடிப்பது பாக்டீரியா தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.
எனவே தண்ணீரை சுட வைத்து ஆற வைத்து குடித்து வரலாம். இது சுவாச பாதையில் தொற்று நோய்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த உதவுகிறது.
அன்னாசிபழம்
அன்னாசிபழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இது மென்மையான சளி சவ்வுகளில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது.
அன்னாசிபழத்தில் உள்ள நொதிகள் சைனஸால் ஏற்படும் அழற்சியை போக்கி வீக்கத்தைக் குறைக்கிறது. எனவே சுவாச பாதை அழற்சி இருப்பவர்கள் அன்னாசிபழத்தை எடுத்துக் கொண்டு வரலாம்.
மிளகு
மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் சைனஸ் பிரச்சினையை தடுக்க உதவுகிறது. நல்ல காரமான மிளகை எடுத்துக் கொள்ளும் போது உடம்பு சூடாகி சளியை இளகச் செய்து மூக்கில் இருந்து வெளியேற்றும்.
இதற்கு முக்கிய காரணம் மிளகில் உள்ள கேப்சைசின் உடம்பிற்கு சூட்டை தருகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது, வலியை குறைக்கிறது, வீக்கத்தையும் குறைக்கிறது.
குதிரைவாலி
குதிரைவாலியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம், மாங்கனீசு மற்றும் என்சைம்கள் போன்றவை நிறைய காணப்படுகிறது.
இது வீக்கத்தைக் குறைத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதில் ஆன்டி பயாடிக் பண்புகள் உள்ளன.
பூண்டு
பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாச தொற்றுக்கு காரணமான வைரஸை போக்க உதவுகிறது.
பூண்டு இதய நோய்களை எதிர்த்து போராடவும் சல தோஷத்திற்கு எதிராக செயல்படவும் உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வரலாம்.