பதிவில் இல்லாதவை இயங்காது; இன்று முதல் அமுலாகும் நடவடிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Income Tax Department Mobile Phones
By Sulokshi Jan 28, 2025 07:26 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இலங்கையில் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதிவில் இல்லாதவை இயங்காது; இன்று முதல் அமுலாகும் நடவடிக்கை | Those Not Registered Will Not Work Mobiles

தொலைபேசிகள் இலத்திரனியல் சாதனங்கள்

கையடக்க தொலைபேசிகள், கம்பி தொடர்பற்ற வலையமைப்புகள், ட்ரோன்கள், ரேடார் உட்பட ரேடியோ அலைகளின் பிற உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாடு உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

வீட்டில் நடந்த அசம்பாவிதம்; மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

வீட்டில் நடந்த அசம்பாவிதம்; மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

பதிவு செய்வதன் மூலம் முறையான அனுமதியைப் பெற முடியும். இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களை பயனாளர்களுக்கு வழங்குவது ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

பதிவில் இல்லாதவை இயங்காது; இன்று முதல் அமுலாகும் நடவடிக்கை | Those Not Registered Will Not Work Mobiles

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சட்டவிரோத இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், இலங்கையில் மொபைல் சாதன கண்காணிப்பை நெறிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழில் சோலார் பழுது பார்க்க வந்தவர்கள் செய்த வேலை; மக்களே அவதானம்

யாழில் சோலார் பழுது பார்க்க வந்தவர்கள் செய்த வேலை; மக்களே அவதானம்

IMEI ஐ TRCSL உடன் பதிவு செய்வது இலங்கையின் தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. மற்றும் உள்ளூர் நெட்வொர்க்குகளை அணுகுவதில் இருந்து அங்கீகரிக்கப்படாத அல்லது திருடப்பட்ட சாதனங்களை தடுக்க உதவுகிறது.

அரசாங்கத்திற்கு வரி வருமானம் இழப்பு

அதேவேளை நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெருமளவான இலத்திரனியல் சாதனங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இத்தகைய சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

திடீரென கூட்டாளிகளை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ

திடீரென கூட்டாளிகளை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ

பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண அடையாளம் (IMEI) என்பது ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண் ஆகும்.

பதிவில் இல்லாதவை இயங்காது; இன்று முதல் அமுலாகும் நடவடிக்கை | Those Not Registered Will Not Work Mobiles

கையடக்க தொலைபேசியில் உள்ள கீபேடில் *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை கையடக்க தொலைபேசியின் திரையில் காண்பிக்க முடியும்.

அதோடு கையடக்க தொலைபேசியின் IMEI எண்ணை பின்வரும் வடிவத்தில் 1909 க்கு SMS ( IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI எண்) அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம் எனவும் ணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

காதல் விவகாரம்; விவாகரத்து கோரும் NPP எம்.பி மனைவி!

காதல் விவகாரம்; விவாகரத்து கோரும் NPP எம்.பி மனைவி!

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US