இனி இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பிரித்தானியா வரலாம்!
உலக சுகாதார நிறுவனம் அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக பிரித்தானியா போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.
இந்நிலையில், பிரித்தானியா தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியா போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக சுகாதார நிறுவனம் அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் திகதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியா செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் பிரித்தானியா செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, பிரித்தானியாவில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.