பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.
இதே வேளை பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ம் திகதி ஆரம்பமானது.
நிகழ்ச்சி தொடங்கி 7 வாரங்கள் முடியவுள்ள நிலையில் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அந்த ப்ரோமோவிலேயே வெளியேறப் போவது இவர் தான் எனப் புரிந்து விடுகின்றது.
அதாவது அதில் "நாமினேட் ஆனவங்க யார் யார்" எனக் கமல் கேட்கின்றார். அதற்கு உடனே ராபர்ட் மாஸ்டர், மணிவண்ணன், ராம் ஆகியோர் கையைத் தூங்குகின்றனர்.
அடுத்த கேள்வியாக இதில் யார் காப்பாற்றப்படுவார்கள் எனக் கேட்கின்றார். அதற்கு போட்டியாளர்கள் அனைவருமே ராம் மற்றும் மணிகண்டனைக் கூறுகின்றனர்.
அதற்கு கமல் "எல்லா நேரத்திலும் ஜோக்கும், விளையாட்டுமாக இருந்திடக்கூடாது என்பதற்கு இதை விடப் பெரிய உதாரணம் இருக்க முடியாது" எனக் கூறுகின்றார்.
மேலும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றார் கமல். மேலும் கடந்த வாரம் முழுவதும் ராம் தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வந்த நிலையில் இன்றைய தினம் ராம் வெளியேற மாட்டார் போல் தெரிகிறது.
அதுமட்டுமல்லாது ரசிகர்கள் கூறுவது போல் ராபர்ட் மாஸ்டர் தான் வெளியேறினாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.