இந்த ஒரு பொருள் செய்யும் மாயம்
நம் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் ஒரு முக்கியமான பொருள் இஞ்சி. பெரும்பாலான உணவுகளில் இஞ்சியை சேர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் மருத்துவ குணங்களும் தான் காரணம்.
இஞ்சி நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் பல நோய்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இது செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் பல அதிசயங்கள் நடக்கும்.
செரிமானம் மற்றும் குமட்டல்
அஜீரண பிரச்சினைகளுக்கு இயற்கையாக நிவாரணமளிக்கும் பொருட்களில் ஒன்று இஞ்சி.
கூடுதலாக இது குமட்டல் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.
ஏனெனில் இது நம் உடலில் இயற்கையான ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.
செரிமான பிரச்சனைகள் இருந்தால், மறக்காமல் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். இதனால நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் பல பாக்டீரியாக்களை தடுக்கலாம்.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
பெரும்பலான பெண்களுக்கு மாதவிடாயின்போது வலி ஏற்படுவது பொதுவானது.
சில நேரங்களில் வலி தீவிரமாக இருக்கலாம் அதன் போது இஞ்சி சாறு அருந்தலாம்.
பெண்கள் தினமும் 1 கிராம் இஞ்சியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடல் பருமன் உங்களுக்கு பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்.
உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் உணவுகளில் இஞ்சியும் ஒன்று.
இஞ்சி தேநீர், இஞ்சி சாறு மற்றும் காய்கறிகளில் இஞ்சியை சேர்ப்பது போன்ற எந்த வடிவிலும் நீங்கள் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
தினமும் இரண்டு கிராம் இஞ்சியை உணவில் சேர்க்கும்போது இரத்த சர்க்கரை அளவு 12 சதவிகிதம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது இஞ்சியின் அதிக ஆற்றலைக் காட்டுகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
ஆய்வுகளின் படி இஞ்சி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் அழற்சியின் வெளிப்பாட்டைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
ஆதலால் தினசரி உணவில் இஞ்சியை சேர்க்க மறக்காதீர்கள்.
மேலும் இது உங்களுக்கு சரும நன்மைகளையும் வழங்குகிறது.