இந்த காரணத்திற்காக தான் உக்ரைன் மீது புடின் போர் தொடுத்துள்ளார் - அலெக்சி நவால்னி
ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே புடின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நாவால்னி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் அதிபரான புதின், 1999 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பிரதமராகவும், அதிபராகவும் இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில், புடின் 2036 வரை பதவியில் இருக்க அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தினார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் புடின், "ஊழலில் ஆழமாக வேரூன்றியவர்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். இதனிடையே, அலெக்ஸி நவல்னியின் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. கொடிய விஷத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அலெக்ஸி நவல்னி, ஜெர்மனியில் இருந்து திரும்பிய ரஷ்ய பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அவர் அவ்வப்போது தனது வழக்கறிஞர் மூலம் ரஷ்யாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து எதிர்ப்புகளை பதிவு செய்கிறார், மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் தற்போதைய போரை கடுமையாக எதிர்க்கிறார். புடின் ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க உக்ரைனில் நடந்த போர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.