30 வருடங்களாக ரணிலை தடுத்தது இதற்குத்தான்; வெளியான பகீர் தகவல்!
இலங்கையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 வருடங்களாக ஜனாதிபதி பதவிக்கு வருவது எதற்காக தடுக்கப்பட்டிருந்தது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி இலங்கையானது ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக மாறும் என்பதாலேயே ரணிலுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டார்.
இதேவேளை ஜக்கிய தேசிய கட்சி கடந்த தேர்தலில் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வேட்பாளர்கள் கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் தற்போது ரணில் மீதான நம்பிக்கை மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ளதாக என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.