என்னடா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை; கடுகுபோல் வெடிக்கபோகும் வீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
விரைவில் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சி பற்றிய பல அப்டேட்டுகளும் ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு இருக்கிறது என்ற ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து வீடு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் பிக் பாஸ் 2 பேராக இருக்க போகிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் அதிகமான டிஆர்பி பெற்ற நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஒரு வீட்டில் இணையதளத்தை பயன்படுத்தாமல் 100 நாட்கள் இருக்க முடியுமா என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. எனினும் தாங்கள் ரசித்த பிரபலங்கள் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியினர்.
வீடும் இரண்டு பிக்பாஸும் இரண்டாம்
ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பல்வேறு பிரபலங்களும் போட்டி போட்டனர். எனினும் நிகழ்ச்சிக்கு முன்பு சேர்த்து வைத்திருந்த மொத்த பெயரும் புகழையும் நிகழ்ச்சியின் பின்னர் சில பிரபலங்கள் தொலைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.
இதனாலேயே இப்போது பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு யோசிக்கின்ற நிலையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளநிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக வெளியான ப்ரோமோவில் பிக் பாஸில் இந்த முறை இரண்டு வீடு என்று தகவலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட நிலையில் மேலும் சில தகவல்கள் பரவி வருகிறது.
அதில் இந்த முறை இரண்டு வீடு மட்டும் அல்லாமல் இரண்டு பிக்பாஸ் இருப்பார்கள் அவர்கள் இரண்டு வீட்டையும் தனித்தனியாக கவனித்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த முறை பிக் பாஸில் பல அதிரடியான மாற்றங்கள் அடுத்தடுத்து செய்து கொண்டு வருவதால் எண்னியில் போட்ட கடுகுபோல் வெடிக்கபோகும் பிக்பாஸ் நிகழ்ழ்சிக்காக ரசிகர்கள் இப்போதே ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.