சர்க்கரை நோயை நிர்மூலமாக்கும் சிறந்த காய்கறி இதுதான் ; கட்டாயம் சாப்பிடுங்க
இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், மக்களை பாதிக்கும் வாழ்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது. ஒரு முறை ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை.
எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், இதயம், கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் உள்ளுருப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி
ஆயுர்வேதத்தில் பல வகையான வைத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.இதில் பல மூலிகைகள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அடங்கும். அத்தகைய ஒரு காய்கறி பாகற்காய், இந்த பச்சை காய்கறி இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதும் கூறப்பட்டுள்ளது.
பாகற்காய் சுவை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் கசப்பு தன்மை தான் பல்வற்றுக்கு அருமருந்தாக உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை தூண்டுகிறது. எனவே பாகற்காய் உங்கள் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. இது ஒரு ஆயுர்வேத மருந்தாக செயல்படுகிறது.

சனி வக்ர நிவர்த்தி ; இந்த ராசிக்காரர்கள் மிகுந்த அவதானத்துடன் இல்லையென்றால் பெரும் கஸ்டம் காத்திருக்கு!
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் பல வழிகளில் எடுத்துக்கொள்ளலாம். அதன் சாறு குடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள், ஜூஸ் வடிவில் குடிக்கலாம். சிறிது உப்பு மற்றும் சீரகப் பொடியை அதில் சேர்க்கலாம்.
இது தவிர, பாகற்காய் காய்கறி அல்லது அதன் ஊறுகாயையும் எடுத்துக்கொள்ளலாம். பாகற்காய் சாப்பிடும் போது, அது சாப்பிட்ட உடனேயும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாகற்காய் உடலை டீடாக்ஸ் செய்யவும் உதவுகிறது. அதனால் நீங்கள் தினமும் காலையில் அதை உட்கொள்வது நல்ல பலனைத் தரும் பாகற்காய் தொடர்ந்து சாப்பிடுபவர்களின் இரத்தம் சுத்தமாக இருக்கும்.மேலும் அது தொடர்பான நோய்கள் விலகி இருக்கும்.
இதனால், உச்சி முதல் பாதம் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்கும் ஆயுர்வேதத்தில், பாகற்காய் பித்தம் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகளிலும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. பாகற்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. எனவே இது உடலில் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் உதவுகிறது.