இது லொக் டவுன் அல்ல; ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம்
ஜூலை 10 வரை முடிந்தளவு அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் ஹரின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இதை ஒரு பொது முடக்க சூழ்நிலையாகக் கருத வேண்டாம் என்றும் , எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இது ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறை என சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் கடைகள், மருந்தகங்கள் பல்பொருள் அங்காடிகள் போன்றவை. சாதாரண நாட்கள் போல் செயல்பட வேண்டும் என்றார்.