முகத்தில் இதனால் கூட பருக்கள் ஏற்படும்....ரகசியம் சொல்லும் அபி டெய்லர் ரேஷ்மா!
தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்ததன் மூலம் ரேஷ்மா முரளிதரன் அதிக ரசிகர்களை சொந்தமாக்கினார்.
ரேஷ்மாவுக்கு டஸ்கி ஸ்கின் என்பதால் எப்போதுமே சரும பராமரிப்பு , மேக்கப் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். இவர் முகப்பரு வந்த உடனே முதலில் ஐஸ்கட்டியை எடுத்து பரு மீது வைத்து விடுவாராம். அதே போல், வெளியில் ஷூட்டிங் அல்லது வெயிலில் சென்று வந்த உடனே டேன் ஆன ஸ்கின்னை சரிசெய்ய தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்த பேக்கை கை, கால், முகத்தில் தடவி 15 நிமிட ஊற வைத்து பின்பு கழுவி விடுவாராம்.
இதற்கு மிக முக்கிய காரணம் படுக்கையில் இருக்கும் பெட் ஷீட்கள், தலையணைகள், போர்வைகளாக கூட இருக்கலாமாம். காரணம், இந்த பெட் ஷீட்களை துவைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் மூலம் முகப்பருக்கள் வருமாம். அதில் ஒட்டி இருக்கும் எண்ணை பசை, பொடுகு, தூசி போன்றவையும் முகப்பருக்களை ஏற்படுத்துமாம்.