பழுகு பாகல் பற்றி அறிந்திராத விடயங்கள்!
எம்மில் பலர் அனேகமாக ஊட்டச்சத்து மிக்க நோய்நிவாரணியாகக் காணப்படும் மற்றும் இலகுவில் கிடைக்ககூடிய காய்கறி வகைகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை.
அவற்றில் மழைக்காலத்தில் எளிதாகக் கிடைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் ஒரு காய் வகையைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.
பழுபாகல் அல்லது மெழுகு பாகல் எனும் மழைக்காலத்தில் கிடைக்கப்பெறும் காய் ஆகும். இது மழைக்காலத்தில் பரவும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. சுலபமாக இதன் உயிரியல் பெயர் மோமோர்டிகா டியோய்கா (momordica dioica) இது ஸ்பைனி கார்ட் (spiny gourd) என்றும் அறியப்படுகிறது.
இந்த காயை சமைத்து சாப்பிடலாம் என்பதே பலருக்குத் தெரியாது.