இலங்கையில் முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
இலங்கையில் திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (19-10-2022) அறிவித்துள்ளனர்.
திலினி பிரியமாலிக்கு சொந்தமான ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்தவர்களில் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபல பிரமுகர்கள் அடங்குவதாக சிஐடி தெரிவித்துள்ளது.
திலினி பிரியமாலிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில் வருமானம் ஈட்டாமல் எவ்வாறு அதிக தொகையை செலவிட்டார் என்பது இதுவரையில் வெளிவரவில்லை என நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.