யாழ் பிரபல தேவாலயத்தில் கைவைத்த திருடர்கள்!
யாழ்ப்பாணம், கட்டைகாடு பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்காபரணங்கள் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் தேவாலயத்தின் உற்சவம் இடம்பெற்றது. இந்த நிலையில் உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்த குழுவொன்று, இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் தேவாலயத்தின் நிர்வாக அருட்தந்தையினால், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் கொள்ளையிடப்பட்ட தங்காபரணங்களின் பெறுமதி சுமார் 30 லட்சம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.