உள்ளே செய்யமுடியாததை வெளியே சென்று செய்கின்றனர்; சாடும் ஆளும் கட்சி எம்பி
நாடாளுமன்றத்தின் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், எரிபொருள், காஸ், டீசல், மண்ணெண்ணெய் வரிசைகளுக்குச் சென்று நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என ஆளும் கட்சியின் எம்.பியான இந்திக அனுருத்த எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தார்.
அதோடு , எதிரணியினர் உள்ளே செய்யமுடியாததை வெளியே சென்று செய்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டுமாயின், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு 105 பேர் தேவை.
சஜித்துக்கு 70 பேர் தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 112 பேர் தேவை. அதனால்தான், அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் செய்யாமல், வெளியே கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
பாண் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும், மீன் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் , பாண் விற்பனை செய்பவரை கண்டு குறைக்கும் நாய், மீன் விற்பவரைக் கண்டு ஏன் குரைப்பதில்லை எனவும் தெரிவித்த அவர்,
நாடாளுமன்றம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளுக்குச் சென்று, நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் எனவும் சவால் விட்டார்.!