பங்குனி மாதம் இந்த ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் மார்ச் 14 ஆம் திகதி மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் தமிழ் ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாதம் பிறந்தது. இந்த ராசியில் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இருப்பார்.
இந்த பங்குனி மாதத்தில் சூரியனின் நிலையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக, சற்று மோசமாகவே இருக்கும். இப்போது மார்ச் மாத சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள பங்குனி மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிலருக்கு பிரச்சனைகள்
மீனம்: பங்குனி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் அதிகப்படியான மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற கோபம் மற்றும் பிடிவாதத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல், உடல் சூடு போன்றவற்றால் அவதிப்படக்கூடும். எனவே இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்: பங்குனி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சோதனை நிறைந்த மாதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். தன்னம்பிக்கை குறையும். பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் உங்களின் ரகசியங்களை பகிர வேண்டாம். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் பங்குனி மாதத்தில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வங்கி இருப்பு குறையும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகரிக்கும். இதன் மூலம் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் வேலையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
கன்னி: பங்குனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.