இந்த கோம்போ சாப்பாடு கூடாதாம்!
ஆரோக்கியமாக வாழ உதவும் உணவே ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் வேலையையும் செய்கிறது. ஆரோக்கியத்திற்கு ஆபத்தை எற்படுத்தும் சில உணவு சேர்க்கைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காவிட்டாலும் இது பல சமயங்களில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் நலனுக்கு நல்லது எனவும், பல உணவுகள் ஒன்றாக உண்ணக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு.
உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை அதிகரிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளை உண்கிறோம்.
இட்லி-சட்னி-சாம்பார், வடை-பாயசம், ப்ரெட் ஜாம் என சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் சில உணவுகள் தனித்தனியாக உட்கொள்ளப்பட வேண்டும் ஏனெனில் அவற்றை செரிக்க உடல் எடுத்துக் கொள்ளும் கால அளவு மாறுபடும்.
மிகவும் எளிதாக செரிமானமாகும் உணவுடன், செரிமானமாக பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று வலி, வீக்கம், சோம்பல், வாயு மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.
நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் மற்றும் உடலில் துர்நாற்றம் என பல பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும்.
பாலும் மீனும்
ஆயுர்வேதக் கோட்பாடுகளின்படி பால் மற்றும் மீன் ஆகிய இரண்டு உணவுகளும் சுவையானவை என்றாலும் இரண்டின் சத்துக்களும் வேறுபட்டவை.
பால் குளிர்ச்சியானது என்றால் மீன் சூடானது. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
முட்டை மற்றும் பன்றி இறைச்சி
உயர் புரத உணவுகளான முட்டை மற்றும் பன்றி இறைச்சி கலவையை தவிர்ப்பது நல்லது.
இந்த இரண்டு உணவுகளிலும் அதிக புரதம் உள்ளது என்பதால் இரண்டையும் ஒன்றாக உண்டால் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும்.
பால் மற்றும் துளசி
சளி மற்றும் இருமல் இருந்தால் துளசி இலையை பயன்படுத்துகிறோம்.
ஆனால் பால் குடித்த அல்லது பால் பொருளை உண்ட 30 நிமிட இடைவெளியில் துளசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டையும் சாப்பிடுவதற்கு இடையில் போதிய இடைவெளி இல்லையென்றால், அது எதிர்விளைவைக் கொடுக்கும்.
சீஸ் உணவு மற்றும் குளிர் பானம்
பீட்சா மற்றும் கோக் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் இந்த கலவை ஆரோக்கியத்திற்கு மோசமானது.
சீஸ் உணவுடன் குளிர் பானத்தை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இவை இரண்டும் உடலால் கிரகிக்கப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும்.
இது வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை கொடுக்கலாம்.
உணவோடு பழங்கள்
உடல் பழங்களை எளிதில் ஜீரணிக்க முடியும், ஆனால் உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும்.
எனவே உணவு செரிக்கப்பட்டு புளிக்க ஆரம்பிக்கும் வரை பழங்கள் உண்ணாமல் இருக்க வேண்டும்.
உணவு உண்ட உடனே அல்லது உண்பதற்கு முன்னர் பழங்களை உட்கொள்ளக் கூடாது.
வெல்லம் மற்றும் தயிர்
வெல்லம் மற்றும் தயிர் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதோடு இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும்.