நவகிரகங்கள் மாற்றத்தால் இந்த 3 ராசிகர்களுக்கும் சிறப்பானதாக இருக்க போகுதாம்
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு.
அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வீரம் மற்றும் தைரியத்தின் காரணியான செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் திகதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய், சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள்.
இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
நம்பிக்கையானவர்களை அதிகம் சம்பாதிப்பார்கள்.
முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சானது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதோடு, நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறக்கூடும்.
வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றிகரமானதாக இருக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.