வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
நாம் தினம்தோறும் பயன்படுத்தும் வெள்ளை சர்கரையினை தவிர்த்தால் நமது உடலானது பல்வேறு பயன்களை பெறுவதாக பரிந்துரைக்கப்படுகின்றது.

வெள்ளை சர்க்கரையை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தாமல் இருந்தால் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேறுகிறது.
மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையும், விஷத்தன்மையும் குறைந்து ரத்தம் படிப்படியாக சுத்தம் அடைகிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த வெள்ளை சர்க்கரை தான்.
இவற்றினை முற்றிலுமாக தவிர்க்கும் பட்சத்தில் கல்லீரல் மற்றும் கணைய செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடிகிறது.
மேலும் தன்னைத்தானே புதுப்பிக்கவும் செய்கிறது. மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உறிஞ்சப்படுவதும் அரிக்கப்படுவதும் குறைகிறது.

வெள்ளை சர்க்கரையால் நமது உடலில் கலந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நமது சிறுநீரகங்கள் அதிகப்படியாக வேலை செய்வதால் நாளடைவில் சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம், மோசமான நோய் எதிர்ப்பு மண்டலம் போன்றவையும் ஏற்பட இவைக் காரணமாக அமைகிறது.
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக மக்கள் தேன், பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்துவது உடலுக்கு பன்மடங்கு நன்மை அளிக்கும்.