இலங்கையில் உணவுப் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (31-10-2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டி. பி. ஹேரத் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் என்ற வகையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இலங்கையில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டது.
விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.