தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றில் அமுளிதுமளி!
நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பதாகைகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தொடர்ந்தும் உரையாற்றி வந்தநிலையிலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டதுடன், கோஷமிட்டவாறு அக்கிராசனத்தையும் அண்மித்தனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சபைக்கு நடுவே வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.