2022 இல் இலங்கையில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
உலகின் பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அதிகளவில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2022 க்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை குறையக்கூடும் என்று காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.
எனினும் அதுவரை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மேலும் உயரலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கார் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பிற நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தியதால் புதிய காரின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய கார் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.
இதேவேளை, 2022 இல் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.