ஒரே இரவில் ஆலயத்திலும் விகாரையிலும் திருட்டு சம்பவங்கள்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Crime
By Sahana Oct 15, 2026 05:38 PM GMT
Report

கண்டி கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், உடதெல்தோட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையிலும் ஒரே இரவில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மேலதிக விசாரணை

இந்தச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கலஹா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள், அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஒரே இரவில் ஆலயத்திலும் விகாரையிலும் திருட்டு சம்பவங்கள் | Thefts At Both A Temple And A Vihara On Same Night

இதேவேளை, கலஹா உடதெல்தோட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையிலும் இனந்தெரியாத நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, விகாரையில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் (Zircon) கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே இரவில் இந்து ஆலயம் மற்றும் பௌத்த விகாரை ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்றும், ஒரே குழுவினர் இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியின்மை ; தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியின்மை ; தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US