தங்கம் விற்கும் விலையில் நகைக் கடையில் நூதன திருட்டு; காட்டிக்கொடுத்த சிசிடிவி!
ஹட்டன் நகரில் இயங்கும் தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் வந்த நபர் ஒருவர் 2,85,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பித்துச் சென்ற சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது .
குறித்த நபர் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டுள்ளார்.

பரபரப்பு சிசிடிவி காட்சி
பின்னர் ஒரு சங்கிலியை பார்த்து கொண்டிருப்பது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென கடையிலிருந்து தப்பியோடியுள்ளார் .
குறித்த மர்ம நபரின் செயற்பாடுகளும் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புகாரின் பேரில் சிசிடிவி காட்சியை வைத்து திருட்டு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.