ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி
கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.

தங்க நகைகள், உண்டியல்கள் திருட்டு
மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருட்டு சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.