ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் பலி
ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திபுல்வெவ ஆற்றில் இடம் பெற்றுள்ளது.
வட்டரெக பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
அநுராதபுரத்துக்கு புனித யாத்திரை சென்ற மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் குறித்த ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹித்தோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.