சுக்கிரனின் நகர்வால் இலாபமும் வெற்றியும் குவியப்போகும் இராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். ஜனவரி 18 ஆம் திகதி சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
தனுசு குரு பகவானின் ராசியாகும். தனுசு ராசியில் சுக்கிரன் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
திட்டமிட்ட காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜனவரி 18 முதல் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள்.
வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
வழக்கத்தை விட நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கலாம்.
ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக தாயின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும்.
ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலையும், வியாபாரமும் சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.