முன்னாள் போராளி பரிதாப மரணம்
திருகோணமலை மூதூர், கங்குவேலி பகுதியில் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதிய சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞர் குழு ஒன்று தமது தொலை பேசி களவாடப்பட்டமை தொடர்பில் முன்னாள் போராளியை தாக்கியதாக தெரியவருகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை அவர் மயக்க நிலையில் இருந்ததை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட வைத்திய நிபுணரின் சோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரது மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.