அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது; உக்ரைன் அதிபர்
அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) எச்சரித்துள்ளார்.
உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) , வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் சமரசம் ஏற்படாத நிலையில் ரஷ்யா 24 ஆவது நாட்களாக தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது.
இருந்தாலும் முக்கியமான நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்று உக்ரேன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் ரஷ்யாவுக்கு இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது ஏற்கனவே,பொருளாதாரத்தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், போரினால் ஏற்படும் இழப்பு ரஷ்யாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா சீனாவிடம் இருந்து ஆயுத உதவி பெற வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.