லொறி ஒன்றைத் திருடி சிலர் செய்த காரியத்தால் அதிர்ச்சி!
வெலிகந்த பிரதேசத்தில் உள்ள பாரிய அரிசி ஆலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கீரி சம்பா திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றைத் திருடிச் சென்ற சிலர் அந்த லொறியிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான கீரி சம்பா அரிசியை அபகரித்து விட்டு லொறியை ஓரிடத்தில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருகுணுகம பிரதேசத்தில் தனது லொறி கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் இது தொடர்பில் லொறியின் உரிமையாளரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், லொறியிலிருந்த 9,100 கிலோ கீரி சம்பா திருடப்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.