யாழில் இரண்டு சபைகள் கட்டுப்பணம் செலுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்தின் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று இரண்டு சபைகளுக்கு மட்டும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளுக்கு மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து சபைகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இரண்டு சபைகளுக்கு மட்டுமே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி காண்டீபன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை மற்றொரு சபைக்கான வேட்புமனுத் தாக்கலும் இன்று மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதி செய்யமுடியவில்லை என்று மாவட்டச் செயலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அருவிக்குத் தெரிவிக்கின்றனர்.
அனைத்து சபைகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமைக்கான காரணம் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.