பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கதி; பெரும் சோகத்தில் அப்பகுதி மக்கள்
பிரித்தானியாவில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா Bexleyheath எனும் இடத்தில் வீட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தை சேர்த்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இந்த துயர சம்பவம் நேற்று இரவு பிரித்தானியா நேரம் இரவு 8 .30 இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாயும் மகளும் மற்றும் மகளின் இருபிள்ளைகளுமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்த அந்நாட்டு பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

