ஊழியரை மிரட்டிய இராஜாங்க அமைச்சர்
லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக உதவியாளர் எச்.டி.வி.கே.சந்திரரத்னவை, கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாக அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை நிதாஹஸ் சேவக சங்கமய தொழிற்சங்கம் அமைச்சரிடம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி, நிறுவனத்தின் தலைவர் சந்தியா அம்பன்வெலவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு சாதாரண ஊழியரை அவர் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், அமைச்சர் தன்னை அமைச்சில் கூட்டத்திற்கு அழைத்து , நிறுவனத்தின் தலைவர் மற்றும் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் அச்சுறுத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாதாரண ஊழியர் தற்போது அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.