சபாநாயகர் பொய்யுரைகின்றார்; சபையில் சஜித் ஆவேசம்!
ஜனாதிபதி பதவி விலக தீர்மானித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
113 பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சியை கையளிக்க தயாரென ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லையெனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சத் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்ன முன்னிலையில் கூறிய ஒரு விடயத்தை சபாநாயகர் தற்போது பொய்யானது என்றும் மறுக்கிறார் என சின வெளியிட்ட சஜித் பிரேமதாச, சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்றே நான் கூறவேண்டும் எனவும் கூறினார்.
இதன்போது, கருத்துவெளியிட்ட சபாநாயகர், அது தொடர்பில் சஜித் பிரேமதாஸ தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், அவர் அதனை திரிபுபடுத்திக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதனை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தொடர்ந்தும் சபாநாயகர் பொய்யுரைப்பதாகவும், அவர் கூறிய விடயத்தையே தான் இங்கு எவ்வித திரிபும் இன்றி முன்வைத்தாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது அதனை மாற்றிக்கூறும் நீங்கள் சபாநாயகர் அல்ல பொய்யர். ஆசனத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் எனவும் சஜித் ஆவேசமாக கூறினார்.
தொடர்புடைய செய்தி
பதவி விலகத் தயார்; கோட்டாபய அதிரடி