சுகாதார பரிசோதகரை தாக்கிய வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு நேர்ந்த நிலை!
பசறை மீதும்பிடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை நேற்று மதியம் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில் மீதும்பிடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத பொருட்கள் இருப்பதாக சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்று களஞ்சியசாலையை திறக்குமாறு வர்த்தக நிலைய உரிமையாளரிடம் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளரின் மகன் தங்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கடமைக்கு இடையூறு விளைவித்து தன்னை தாக்கியதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சுகாதார பரிசோதகர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் மீதும்பிடி வர்த்தக நிலைய வர்த்தகரின் 24 வயதுடைய மகன் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மற்றும் தாக்கிய குற்றச்சாட்டில் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.