வீட்டில் இஸ்திரியிட வேண்டாம் என கூறிய தாயை தாக்கிய மகன்
மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால் தமது வீட்டில் உடைகளை இஸ்திரியிட (அயன் செய்தல்) வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அகலவத்தை ஓமட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
கைது செய்யப்பட்ட மகன் 37 வயதுடைய பேருந்து சாரதி என்பதுடன் மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள அவரது தாயாரின் வீட்டிக்கு உடைகளை இஸ்திரியிட சென்றுள்ளார்.
அதன்போது 66 வயதான அவரது தாய் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் வீட்டில் மின் அழுத்தியை (அயன்) பாவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மகன் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.