சுமந்திரன் அணிக்கு வல்வெட்டித்துறையில் காத்திருந்த அதிர்ச்சி
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையும் இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்கிழமை தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.
அதன் போது கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன் வைக்கப்பட்ட போதும் அதுவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோணோ தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.
அதனை அடுத்து புதிய தவிசாளராக என். செல்வேந்திரா கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவரால் முன் வைக்கப்பட்ட இரு பாதீடும் தோல்வியடைந்துள்ளது.
தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து , சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா சுமந்திரன் அணியின் உதவியுடன் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் உள்ள சுமந்திரனிற்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
தொடர்புடைய செய்தி
சுமந்திரன் அணியின் வல்வெட்டித்துறை நகரசபையின் பாதீடிற்கு ஆப்பு