இரு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரியாக மகளிர் பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
மகளிர் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். ஐ. காஞ்சனா சமரகோன் கம்பஹா மற்றும் காலி ஆகிய பொலிஸ் நிலையங்களை நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
எஸ்.எம். ஐ. காஞ்சனா அவர்கள் 1997ஆம் ஆண்டு மகளிர் உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டதுடன் சிலாபம், வவுனியா, கம்பஹா, மீரிகம மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களைச் சேர்ந்த குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சேவைப்புரிந்துள்ளாா்.
இந்த நிலையில் தற்போது திறக்கப்படவுள்ள புதிய பொலிஸ் நிலையங்கள் இரண்டும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரதான பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா சமரகோன் கேகாலை ஹேம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கோகாலை மகளிர் மகா வித்தியாலயத்தில் தனது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளாா்.