தமிழர்களின் சங்கறுத்தவர்கள் சங்கில் வருகிறார்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களா இருந்து இராணுவத்தினருடன் இருந்து கொண்டு தமிழ் இளைஞர்களை காட்டிக் கொடுத்தவர்கள், தமிழ் இளைஞர்களை, போராளிகளை, பெண்களை துடிக்க துடிக்க கொலை செய்தவர்கள், தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்கள் இன்று சங்கு சின்னத்தை தூக்கிக்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த ஐனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் அடையாளம் என்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற சங்கு சின்னம்.
இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பட்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களின் கையில் சங்கு சின்னம் போனது எவ்வாறு.
தமிழ் அரசுக் கட்சியின் பொதுக் கூட்டங்களில் எல்லாம் நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் போது சங்கு சின்னத்தில் உள்ளவர்கள் மாவீரர்களினால் கொல்லப்பட்ட தமிழர்களை காட்டிக் கொடுத்த தமிழர்களை இலங்கை இராணுவத்துடன் இணைந்து படுகொலை செய்த ஆயுதக் குழுக்களில் இருந்தவர்களுக்கு மேடை மேடையா அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மிகவும் குறிப்பாக கோவிந்தன் கருணாகரன் என்பவர் இந்த மாவட்டத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செய்த கொலைகள் எவ்வளவு என்று தெரியும்.
ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலோ அமைப்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்திய கொலைகள், காட்டிக் கொடுப்புக்கள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தண்டனை பட்டியலில் ஜனா சேர்க்கப்பட்டு அவரை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி செய்தபோது அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்திருந்ததார்.
2002 ம் ஆண்டு ஆயுதக் குழுக்களை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கி போது குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரணை மாத்திரம் சேர்க்க கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த அளவுக்கு டெலோ ஜனா தமிழ் மக்களுக்கு எதிராக மன்னிக்க முடியாத குற்றங்களை செய்திருந்தார்.
டெலோ ஜனாவை படுகொலை செய்வதற்கு மட்டக்களப்பில் உள்ள திரையரங்கம் ஒன்றினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் பதுங்கி இருந்த போது அதில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தார்.
குறித்த தாக்குதலை நடாத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோசப் பரராஜ சிங்கம் அவர்கள் உதவினார் என்ற காரணத்திற்காக அவரது மரண வீட்டிற்கும் மட்டக்களப்பு மாவட்ட நடைபெற்ற ஜோசப் பரராஜ சிங்கம் அவர்களின் எந்த வோரு நினைவு தினத்திலும் இதுவரை ஜனா கலந்து கொள்ளவில்லை.
அப்போது இருந்தே தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார் ஜனா. இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த ஜனா முதலில் செய்த வேலை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்ட டெலோவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பிரசன்ன இந்திரகுமாரை பிரித்தெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலோவை தனியாக செயற்பட தூண்டினார்.
அதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பிளவுகள் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வந்த தமிழ் கட்சிகள் பிளவு பட ஆரம்பித்தது. அதேபோல் டெலோவின் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்ட ஜனா முதலில் செய்தது வடகிழக்கில் டொலோவை தனியாக இயங்க செய்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருந்த தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக செயற்படத் தொடங்கினார்.
அதுவரை காலமும் தென்னிலங்கையில் இருந்த அரசியல் தலைவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பாக சந்தித்து வந்த டெலோ அமைப்பு முதல் முறையாக டெலோவாக தனியாக சந்திக்க தொடங்கினர்.
தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை இல்லாதொழிக்கும் நோக்குடன் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இந்தியாவுடனும் இரகசிய உறவை பேணிய ஜனா தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சியின் முக்கியத்துவத்தை இல்லாது ஒழிக்க டெலோ மீண்டும் அரசின் ஒட்டுக் குழுவாக செயற்படத் தொடங்கியது.
இதன் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை துண்டு துண்டாக உடைக்க ஜனாவே பிரதான காரணமாக இருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுடன் இணைந்து சஜித் பிரேமதாசவின் வாக்கு வங்கியை இல்லாதொழிக்க தமிழ் மக்கள் பொதுச் சபையின் ஜனாதிபதி வேட்பாளரை பயன்படுத்திய ஜனா இறுதியில் தமிழ் மக்கள் பொதுச் சபையை ஏமாற்றி சங்குச் சின்னத்தை கைப்பற்றியதோடு ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கிய சங்கு தான் தற்போது பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறது என்று மட்டக்களப்பு மாவட்டம் பூராக பிரச்சாரம் செய்து வருகிறார்.