14 வருடங்களுக்கு பிறகு நடந்த அதே கொடூரம் ; ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
சென்னையில் 14 வருடத்திற்கு பிறகு அதே பாணியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த சரவணன். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். சரவணனின் தம்பிக்கு திருணமாகாத நிலையில், அவரும் சரவணன் உடனே தங்கி வசித்து வருகிறார்.

நடத்தப்பட்ட விசாரணை
அவரது தம்பி மது பழக்கத்துக்கு அடிமையாகி, சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன் அன்று இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த தம்பி, தனது அண்ணன் சரவணனிடம் வீண் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் சரவணனை துணி வெட்டும் கத்திரிக் கோலால் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த ரத்தப் போக்குடன் மயங்கி விழந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன், திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை பொலிஸார் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏற்கனவே தனது தந்தையை கொலை செய்தவர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
2012 ஆம் ஆண்டு தந்தையை கத்திரிக்கோலால் கொலை செய்த சங்கர், மீண்டும் அதே பாணியில் கத்திரிக்கோலால் 14 வருடம் கழித்து தன் அண்ணனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.