நாட்டில் சிக்குன்குன்யா தீவிரமடையும் அபாயம் ; மக்களே அவதானம்
நாடளாவியரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நோய் தடுப்பு திட்டங்கள்
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 2,709 பேரும், கம்பஹாவில் 2,453 பேரும், களுத்துறையில் 567 பேரும் பதிவாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், நும்புகளால் பரவும் சிக்குன்குன்யா நோயை தடுப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எனது உத்தரவின் கீழ் கொழும்பு பிராந்திய சுகாதார அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி புகை விசுறுதல் போன்ற அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
அத்துடன், இம் மாதத்தில் 18 சிக்குன்குன்யா நோய் தடுப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.