ராஜபக்ச குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது - பிரபல ஜோதிடர் தகவல்
இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை என ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு காரணமாக அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளும் அலுவலகங்களும் பெருமளவு மக்களால் முற்றுகையிடப்படும் நிலையை எதிர்கொள்ளும் அதேவேளை ஆன்மீக தலைவர்களும் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
ஜோதிடர்கள் பிரதமநிர்வாகிகளுடன் காணப்படும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள செயற்பாட்டாளர்கள் அவர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என வேண்டும் கோள் விடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஜோதிடர்களில் பிரபலமாக ஒருவர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் நீண்டநாள் ஜோதிடர் தற்போதைய நெருக்கடி இலங்கை அரசியலை இரண்டு தசாப்தத்திற்கும் மேல் ஆக்கிரமித்திருந்த வம்சாவளியின் வீழ்ச்சிக்கான அறிகுறி என தெரிவித்தார். இது ராஜபக்ச குடும்பத்தின் முடிவு என சுமணதாச அபயகுணவர்த்தன ஏஎப்பியிற்கு தெரிவித்தார்.
2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் என தெரிவித்ததன் காரணமாக அவர் மீதான நம்பிக்கைககள் குறைவடைந்திருந்தன எனினும் இம்முறை அதிக உறுதிப்பாட்டுடன் அவர் ராஜபக்ச குடும்பத்தின் முடிவு குறித்து தெரிவித்தார்.
ராஜபக்சாக்கள் மோசமான முடிவை எதிர்கொள்வார்கள் என்பது ஒவ்வொரு இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் சகோதரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் இராணுவதளபதியும், இலங்கையின் வரலாற்று பெருமைமிக்க அனுராதபுரத்தில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் நீண்டகாலமாக ஆலோசனைகளை பெற்றுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஞானஅக்காவை சந்திப்பதற்காக ஜனாதிபதி அடிக்கடி அனுராதபுரத்திற்கு செல்வார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை அரசாங்கம் கையாண்ட விதத்தில் ஞான அக்கா செல்வாக்கு செலுத்தினார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் அவரின் வழிபாட்டு இடமொன்றிற்குள் பல செயற்பாட்டாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து ஞான அக்கா அங்கிருந்து தப்பியோடினார்.
தன்னையே பாதுகாக்க முடியாதபோது ஞான அக்காவினால் எவ்வாறு ஜனாதிபதியை பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பினார் பத்தி எழுத்தாளர் குசல்பெரேரா .
பல முக்கிய அரசியல்வாதிகளும் ஞானா அக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளனர் என  அவர் தெரிவித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        