மாணவியை வெளியேற்றிய அதிபர்....மரத்தில் ஏறி போராடிய தந்தை
தந்தைக்கு கொரோனா என பொய்யான தகவலின் பெயரில் மாணவியை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய அதிபருக்கு எதிராக பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
காலி லேல்வல ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் கல்வி கற்கும் 8 வயதுடைய மாணவி பாடசாலைக்கு சென்ற போது அவரது தந்தைக்கு கொரோனா என கூறிய அதிபர் அவரை திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனை எதிர்த்து மாணவியின் தந்தை நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பில் மாணவியின் தந்தை கூறியதாவது,
"நான் கூலி வேலை செய்து வருகிறேன், எனக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை மகளை பாடசாலைக்கு அனுப்பினேன், அப்போது தனக்கு கொரோனா இருப்பதாக கூறி மகளை திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் மறுநாள் பாடசாலைக்கு அனுப்பியபோதும் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதுபோன்ற போலியான தகவலின் அடிப்படையில் குழநதைகளை திருப்பி அனுப்புவது தவறு. மேலும் தனக்கிருந்த கூலி வேலையும் இல்லாமல் போய்விட்டது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபரை அணுகியபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.