இலங்கை மக்களை ஏக்கம் கொள்ளவைத்த தங்கத்தின் விலை!
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதனால் மக்களுக்கு தங்கத்தின் மீதான நாட்டம் குறைந்தபாடில்லை.
இன்றைய தங்கவிலை நிலவரம்
இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 659,821 ரூபாவாக அதிகரித்தள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,280 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,370 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேசமயம் , 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 186,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,750 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 163,000 ரூபாவாகவும் அதிகரித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.