மக்களுக்கு இன்று குஷியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!
தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜூன் 1ஆம் திகதி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 14ம் திகதி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து சென்னையில் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.