ராக்கெட் வேகத்தில் பறக்கும் பட்டாசு பொருட்களின் விலை!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய பட்டாசு பொதி இந்த பண்டிகை காலத்தில் 180 முதல் 200 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் மற்ற பட்டாசுகளின் விலை 300 வரை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதாலும், பட்டாசு உற்பத்திக்கு அதிக செலவாகும் என்பதாலும் பட்டாசுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும் பட்டாசு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.