இராணுவத்தினர் தாக்கவிலை; தவறி விழுத்தேன்! சுன்னாகம் இளைஞர் வாக்குமூலம்
யாழ். சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டிருந்த இளைஞன் தான் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் , சுன்னாக பொலிஸார் வைத்திய சாலைக்கு சென்று இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது , தான் தவறி விழுந்தே காயங்களுக்கு உள்ளானதாக வாக்கு மூலம் அளித்ததுடன் , தனக்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.