பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் பயங்கரமானது - சாணக்கியன்
பயங்கரவாத தடைச்சட்டம் உண்மையில் ஒரு பயங்கரமான சட்டம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலரை இன்று சந்தித்ததன் பின்ன கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் உறவினர்களின் விடுதலையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து வடக்கு கிழக்கிற்கு வெளியே பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.