அஸ்வெசும”பயனாளிகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட விசேட அறிக்கை!
அஸ்வெசும”பயனாளிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்பதை அரசு வலியுறுத்துகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்திற்கு அரசியல் முகம் கொடுத்து தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட சில கட்சிகளின் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு காலத்தில் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டு அரசியல் தூண்டுதல்கள் அல்லது வேறு வெளி தாக்கங்களுக்கு அடிபணியாமல் உடனடியாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு அந்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, “அஸ்வெசும” நலன்புரி நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஜூலை 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.